Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 03 ஏப்ரல் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சட்டவிரோத
செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சட்ட விரோத மது விற்பனை மற்றும் கனிம கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இவை
அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை போலீஸ் கடத்தல் கும்பலுடன்
கைகோர்த்துக்கொண்டு லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீவட்டிபட்டி பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத கனிம கடத்தல் கும்பலிடம் சாலை
ஓரம் ஒரு காரில் அமர்ந்து கொண்டு வேரும் பேசி 15,000 லஞ்சப் பணம் வாங்கிய
உளவுத்துறை போலீசின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் உளவுத்துறை போலீஸ் முத்து
என்பவர் கனிம வள கடத்தல் கும்பலிடம் மாதம் எனக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க வேண்டும் எனவும் அதே போல் உயர் அதிகாரிகளுக்கு நான்தான் ரிப்போர்ட்
கொடுக்கிறேன் எனவும் எனக்கு பணம் தரவில்லை என்றால் அப்படியே உங்களை சிக்க
வைத்து விடுவேன் என கூறி கனிம கடத்தல் கும்பலிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள்
வெளியாகி உள்ளன. அதில் கனிம வள கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பத்தாயிரம்
ரூபாய் பணம் கொடுக்கிறார் ஆனால் அந்த உளவுத்துறை போலீஸ் எனக்கு 15000 ரூபாய்
வேண்டும் நான் எவ்வளவு செலவு பண்ணுகிறேன் எனக்கு தெரியுமா இன்ஸ்பெக்டருக்கு
கவனிப்பது போல் எதற்கும் கவனிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களைப் பற்றி
ரிப்போர்ட்டை அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளார்.
பத்தாயிரம் ரூபாய் முதலில் கொடுத்த கடத்தல் கும்பல் அதை வாங்க மறுக்கவே உளவுத்துறை போலீஸ் பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கொடு இல்லை
என்றால் செல் என மிரட்டி 15000 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதேபோல் லஞ்சம் பணத்தை எப்படி தனக்கு கொண்டு வருவது என பேசும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய உளவுத்துறை போலீஸ்
இதுபோன்று சட்டவிரோத செயல்களுக்கு லஞ்சத்தை அடாவடியாக பெற்றுக் கொண்டு செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam