Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய திரை உலகில் பிரபல பாடகராக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் நம் எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது..
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வி.டி.பட்டதிரிபாட் நினைவிடத்தில் அவரது உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நே சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.
10 அடி உயரமுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பாடகர்கள் சித்ரா, சுஜாதா, மனோ, ஹரிகரன், உன்னிமேனன், ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி.சரண், மதுபாலகிருஷ்ணன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.. அந்த வீடியோவில்
கான கந்தர்வன் எஸ்பி பாலசுப்ரமணியம் பற்றி இந்தியாவில் தெரியாதவர்கள் இல்லை.. தன்னுடைய பாடும் திறமையால் எல்லோரையும் மகிழ வைத்தவர்.. அருமையான மனிதர்..நான் ஒருமுறை அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் வழியில் மும்பையில் இறங்கி ஏற வேறு விமானம் ஏற வேண்டும்.. அந்த விமானத்தில் எஸ்பிபியும் வந்தார்.. அப்போது சங்கராபரணம் படம் வெளியாகி இருந்தது.. ரசிகர்கள் அவரிடம் அப்படத்தின் பாடலை பாடுமாறு கேட்டுக்கொண்டனர்.. அதிகாலை 1 மணிக்கு சலிக்காமல் அத்தனை முறை அந்த பாட்டை பாடினார்.. இதுமாதிரி அருமையான அற்புதமான மனிதர்..அவருடைய அகால மரணம் மிகவும் வருத்தமான விஷயம்..இந்த அவரச யுகத்தில் எல்லோரையும் மறக்கிற நேரத்தில் மக்கள் அவரை மறக்காமல் இருக்க எஸ்பிபிக்கு பாலக்காட்டில் சிலை உருவாக்கியுள்ளனர்..இந்த முடிவு எடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்..
Hindusthan Samachar / P YUVARAJ