ரூ.500 கோடி மதிப்பிலான 323 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் - ஆறு பேர் கைது
ராமநாதபுரம், 03 ஏப்ரல் (ஹி.ச.) இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கக்கூடிய படகு சந்தே
Heroin


ராமநாதபுரம், 03 ஏப்ரல் (ஹி.ச.)

இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கக்கூடிய படகு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்துள்ளது.

இதனை அடுத்து சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படை சுமார் 323 கிலோ ஹெராயின் இருந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்து இலங்கை சேர்ந்த ஆறு நபரை கைது செய்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச மதிப்பு 500 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடத்தி வரப்பட்ட ஹெராயின் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. தமிழகத்திலிருந்து குறிப்பாக ராமேஸ்வரம் கடல் வழியாக கொண்டு வரப்பட்டதா என பல்வேறு கோணங்களில் இலங்கை கடற்படை தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.

Hindusthan Samachar / ANANDHAN