Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திமுக எம் பி யும் கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபடும்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வெயிலில் வாட்டி மயக்கமடையும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நிறுத்தப்படாமல் சரக்கு வாகன வண்டிகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பேருந்து இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலில் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN