Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 03 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், தமிழக -கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அருகாமையில் உள்ளது புதூர் கிராமம். இந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக அணி மாநில துணை அமைப்பாளரான மோசஸ் என்பவரது வீடு உள்ள நிலையில், அவரது வீட்டில் தற்போது வருமான வரித் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இரண்டு வாகனங்களில் வருகை தந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது விசிக பிரமுகர் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இவரது வீட்டில் இதே போல் பாராளுமன்ற தேர்தலின் போதும் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலின் போதும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், விசிக பிரமுகர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வரும் நிலையில், தேர்தல் நேரங்களில் பண பட்டுவாடா ஏதேனும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? இல்லையெனில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் வருமான வரித்துணர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN