டிடிவி தினகரன் புனிதவெள்ளி வாழ்த்து
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச) இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது. சென்னையில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய
டிடிவி தினகரன் புனிதவெள்ளி வாழ்த்து


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள்

அனுசரிக்கிறார்கள். அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது.

சென்னையில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) இ.சி.ஐ. பெந்தேகோஸ்து, உள்ளிட்ட அனைத்து திருச்சபை சார்ந்த ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடைபெற்றது.

புனித வெள்ளியை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் நிரந்தர விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க இயேசு கிறிஸ்து அவர்கள் தன்னை சிலுவையில் அர்ப்பணித்ததை நினைவு கூறும் புனித வெள்ளி திருநாள் இன்று.

மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக இயேசுபிரான் அவர்கள் செய்த தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்கிடும் இந்நாளில் அவர் போதித்த கருணை, இரக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b