2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-விற்கே ஆதரவு - தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பு அறிவிப்பு
பெரம்பலூர், 03 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ் நாயுடு பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் அவரை நேரில் சந்தித
உள


பெரம்பலூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ் நாயுடு பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் அவரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் கூட்டமைப்பின் போது நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர்.அருணாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் மற்றும் ஒன்றிய கழக இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J