Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வழியே வந்த ராமதாசின் ஆதரவு வேட்பாளர் முரளி சங்கர் உள்ளிட்ட சிலர் பாமக கட்சி கொடி கட்டிய காரில் பயணித்ததை அன்புமணி அதிரவாளர்கள் தடுத்து நிறுத்தி தட்டி கேட்டதாக தெரிய வருகிறது.
அப்போது காரை நிறுத்தி ராமதாஸ் ஆதரவாளர்களிடம் அன்புமணி ஆதரவாளர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை தரப்பினருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் பிரிவினர் சேர்ந்தவர்கள் பாமக கொடியையும், துண்டையும் பயன்படுத்தக் கூடாது என அன்புமணி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொண்ட நிலையில் போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டார்.
சரியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் சாலையில் சிறிது நேரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள்,உரிய முறையில் ஏற்கனவே மனு கொடுத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ராமதாஸ் தரப்பு வேட்பாளர் முரளி சங்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam