Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரதேசம், 03 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறு கொடூர சம்பவமாக மாறியுள்ளது.பூல்கான் என்பவர் தனது மனைவி பானாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரம் அடைந்து, அவரது மூக்கும் கன்னமும் கடித்துள்ளார்.
இதில் மனைவியின் மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன், கன்னத்திலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.காயமடைந்த பெண் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சுமார் 10 தையல்கள் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளி கணவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam