Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வணிகர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த கோரிக்கைகளில் பத்துக்கும் மேற்பட்டவை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, அவை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வணிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாக கூறினார்.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள 8000 ரூபாய் கூப்பன் திட்டம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாகவும், இது பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்களுக்கும் நேரடி பலன் அளிக்கும் என்றும் விக்ரமராஜா விளக்கினார்.
இதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கூப்பன் வழங்கும் திட்டத்தில் எந்தவித தவறும் நடைபெறாது என்றும், திட்டம் சீராக செயல்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ