தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்திற்கு கூடுதலாக 6 பார்வையாளர்கள் நியமனம்
தூத்துக்குடி, 30 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தூத்துக்க
6 Additional Observers Appointed to Thoothukudi


தூத்துக்குடி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு, மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் என பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த 3 மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகளைக் கூடுதலாகத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் தூத்துக்குடி தொகுதிக்கும். சோடிங்புயீ ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கும், அரவிந்த் குமார் வெர்மா ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக இருப்பார்கள்.

விளாத்திகுளம் தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவிஸ் சர்வீஸ் அதிகாரி தீபக் வசந்த் கிர்ஷ்சாகர், திருச்செந்தூர் தொகுதிக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி பாரத் பூஷன் பிரசாத், கோவில்பட்டி தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி ஜித்தேந்திர சாகேப்ராவ் ககுஸ்தே ஆகியோர் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நியமிக்கப்பட்டுள்ள 6 பார்வையாளர்களும் வரும் மே 2-ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைவார்கள். அன்றிலிருந்து அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b