Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மாலை நேரங்களில் கோட்டூர்புரம் பகுதியில் செயல்படும் தனியார் பரதநாட்டிய பயிற்சி மையத்திற்கு சென்று நடனம் கற்றுவருகிறார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்றிருந்த சிறுமியை, அந்த பயிற்சி மையத்தை நடத்தும் ஆசிரியையின் கணவரான உமாசங்கர் (60) தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனடியாக பெற்றோர் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உமாசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ