Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் நகரப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் மற்றும் MRTS இணைப்பு நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
MRTS சேவையை மேம்படுத்தும் வகையில், அதன் பராமரிப்பு மற்றும் இயக்க பொறுப்புகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை இந்தியன் ரயில்வே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, தமிழக அரசின் இறுதி ஒப்புதலுக்காக கோப்பு பரிசீலனையில் உள்ளது.
அனைத்து அனுமதிகளும் கிடைத்தவுடன், வரும் ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் MRTS சேவையில் கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
இணைப்பு நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களுக்கு ஒரே டிக்கெட் முறையில் பயணம், சேவை நேர்த்தி, நிலைய வசதிகள் மேம்பாடு, பாதுகாப்பு உயர்வு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பழைய கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு, MRTS பாதைகள் முழுமையாக பயன்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுவதால், பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam