சென்னை சென்ட்ரல் அருகே காவல் வாகனம் திருடி விபத்து - கேரள இளைஞர் கைது
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே குடிபோதையில் காவல்துறை வாகனத்தை திருடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொழிச்சலூர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரள மாந
Pol


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே குடிபோதையில் காவல்துறை வாகனத்தை திருடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொழிச்சலூர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த லிஜோ ஜோசப் என்பவர், சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று அவர் மதுபோதையில் சென்னை சென்ட்ரல் அருகே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினர் பயன்படுத்தி வந்த வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் சாவி இருந்ததை கவனித்த லிஜோ ஜோசப், வாகனத்தை திருடி எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காவல் வாகனம் சேதமடைந்ததுடன், அருகிலிருந்த சில வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று லிஜோ ஜோசப்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,

காவல்துறை வாகனத்தை திருடிய குற்றச்சாட்டில் பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்தியதற்காக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை வாகனங்கள் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ