Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச)
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் இன்று காலை RPF போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒல்லூர் காவல் நிலைய போலீசார் அனுப்பிய புகைப்படத்தின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பொது பெட்டியில் பயணம் செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாரூன் ஜனா என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து சுமார் ரூ.18 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 134 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
பின்னர், இந்த சம்பவம் குறித்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ரயில் நிலையத்தில் பிடிபட்ட நபர் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ