Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ள திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அதன்படி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று (ஏப்ரல் 30), மே 1 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் நண்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று, மே 1 மற்றும் மே 2 ஆகிய நாட்களில் நண்பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் முன்கூட்டியே பயணத் திட்டங்களை அமைத்து, இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P