Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லை பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் பெரிய அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து ஒசூர் நோக்கி வந்த ஒரு டிராவல்ஸ் பேருந்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் பொதிகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
இந்த சோதனையில் மதுரையை சேர்ந்த விஷால் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரின் பொதிகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 18 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கஞ்சா எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது, இதன் பின்னணி யார் என்பதையும் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மாநில எல்லை பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெறுவதால் இத்தகைய கடத்தல் முயற்சிகள் தடைக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN