கீழடி அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு - 11ஆம் கட்டத்தில் சாயக் கிண்ணங்கள் வெளிச்சம்
மதுரை, 30 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11ஆம் கட்ட அகழாய்வில், தொடர்ச்சியாக சாயக் கிண்ணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அகழாய்வின் போது இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாயக் கிண்ணங்கள் வெளிக்கொணர
Keeladi


மதுரை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11ஆம் கட்ட அகழாய்வில், தொடர்ச்சியாக சாயக் கிண்ணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகழாய்வின் போது இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாயக் கிண்ணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இக்கிண்ணங்கள் செங்கல் கட்டுமானத்தின் உட்புறத்தில் காணப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் பண்டைய காலத்தில் சாயத் தொழிற்சாலை அல்லது நிறமூட்டும் பணிகள் நடைபெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கீழடி அகழாய்வு தமிழர் நாகரிகத்தின் மேம்பட்ட நகர வாழ்க்கை, தொழில்கள் மற்றும் கைவினை திறன்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு அக்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுவதாக மதிக்கப்படுகிறது.

மேலும், இந்த சாயக் கிண்ணங்களின் பயன்பாடு, காலக்கட்டம் மற்றும் தொடர்புடைய தொழில்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ