Enter your Email Address to subscribe to our newsletters

காசர்கோடு, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கேரளாவில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதன் காரணமாக காடுகளில் வசிக்கும் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், காசர்கோடு மாவட்டம் அடூரில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
அந்த பாம்பு வீட்டில் இருந்த மேசையின் மீது ஊர்ந்து சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் அதன் உடம்பில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து, அதன் உடம்பில் சிக்கியிருந்த தங்க மோதிரத்தை கவனமாக அகற்றினர்.
அதன்பின் எந்தவித காயமும் இல்லாமல் பாம்பை அருகிலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA