மதுரை நகரை வந்தடைந்த கள்ளழகர் – பக்தர்கள் உற்சாக வரவேற்பு
மதுரை, 30 ஏப்ரல் (ஹி.ச) மதுரையில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி, அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை நகரை வந்தடைந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, மிகுந்த பக்தி உணர்வுடன் அவரை வரவேற்றனர்.
கள்ளழகர்


மதுரை, 30 ஏப்ரல் (ஹி.ச)

மதுரையில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி, அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை நகரை வந்தடைந்தார்.

வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, மிகுந்த பக்தி உணர்வுடன் அவரை வரவேற்றனர்.

கள்ளர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், பல மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து நகரை அடைந்தார்.

முக்கிய நிகழ்வாக, மதுரை மக்களின் “எதிர்சேவை” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பக்தர்கள் “கோவிந்தா” முழக்கங்களுடன் ஆடிப்பாடி, தண்ணீர் பீய்ச்சி அடித்து, நேர்த்திக்கடன்களை செலுத்தி உற்சாகமாக சாமியை வரவேற்றனர்.

இதையடுத்து, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முக்கிய வைபவத்திற்காக பெரும் திரளான மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வு சித்திரை திருவிழாவின் உச்சக்கட்டமாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam