Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளில் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்த பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு அங்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவு ஆகியவை வழங்கப்படுகின்றது.
இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 08.04.2026 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 06.05.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும்.
தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 07.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் மாணவர்களுக்கும், 08.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் மாணவிகளுக்கும் நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ளமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
காலை 7.00 மணி முதல் 07.05.2026 அன்று மாணவர்களுக்கான போட்டிகளும் மற்றும் 08.05.2026 அன்று மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவர்கள்), கைப்பந்து, ஆகிய மாவட்ட அளவிலான போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அந்தந்த மாவட்ட விளையாட்டரங்கங்களில் நடைபெறும்.
மாவட்ட அளவிலான தேர்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b