Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம பெருமாள் தன் பக்தன் பிரகலாதனைத் துயரத்திலிருந்து காக்க, ஒரு நொடியும் தாமதிக்காமல் தூணிலிருந்து உடனடியாகத் தோன்றியவர். இதன் காரணமாகவே, ஆண்டுதோறும் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் ஜெயந்தி விழா பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
நரசிம்மரை வழிபட்டால் எந்தவொரு காரியமும் தங்கு தடையின்றி உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தமிழகத்திலேயே நரசிம்மருக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ள அபூர்வத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள , ராதாகிருஷ்ணா ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று அதிகாலையில் கணபதி ஹோமம் மற்றும் நரசிம்மர் ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. சுவாமிக்கு விசேஷ திரவியங்களால் கலச அபிஷேகம் நடைபெற்றது.நண்பகல் வேளையில் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாகச் சிறப்புச் சங்கீர்த்தனம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b