Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டிய கடைசி தேதியை தவறவிட்ட பயனர்களுக்கு கூடுதலாக 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்த காலத்தில் பில் தொகையை செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 3 நாள் அவகாசத்திற்குள் பணம் செலுத்தப்படும் நிலையில், பயனர்களின் சிபில் ஸ்கோரிலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு, வங்கி பரிவர்த்தனை தாமதம் அல்லது தற்காலிக பண நெருக்கடி போன்ற சூழ்நிலைகளில் இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும் என நிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில், 3 நாட்கள் அவகாசத்தையும் கடந்தும் கட்டணம் செலுத்தத் தவறினால் மட்டுமே கடன் வரலாற்றில் எதிர்மறை பதிவு செய்யப்படும் என்றும் ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
சிபில் ஸ்கோர் குறைந்தால் எதிர்காலத்தில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த புதிய நடைமுறை கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிவாரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறை 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA