பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதல்
திருநெல்வேலி, 30 ஏப்ரல் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதிகள் தங்கியிருந்த சிறைக்கூடத்தில் படுத்து உறங்கும் இடம்
Palayankottai Jail


திருநெல்வேலி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய

சிறையில் சுமார்

1,300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக் கைதிகள் தங்கியிருந்த சிறைக்கூடத்தில் படுத்து உறங்கும் இடம் தொடர்பாக முதலில் முன் தினம் இரவு சிறிய தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அது அப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அதே பிரச்சினை மறுநாள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

நேற்று இரவு, இந்த விவகாரம் மீண்டும் எழுந்ததால் கைதிகள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகள் உடனடியாக சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோதலுக்கு காரணமான சூழ்நிலைகள் மற்றும் இதில் ஈடுபட்டவர்களை குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், வசதிகள் குறைவாக இருப்பதும் இதுபோன்ற தகராறுகளுக்கு காரணமாக அமைகிறது என்று கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN