புதுக்கோட்டையில் 6 கிராமங்களில் மறுவாக்குப்பதிவு கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலகுறிச்சி, ஆர்.சீகம்பட்டி உள்ளி
High court


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலகுறிச்சி, ஆர்.சீகம்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள், அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிடும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போயுள்ளதாக கூறி பாலகுறிச்சியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில், அந்த ஆறு கிராமங்களை சேர்ந்த மொத்தம் 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால், அவர்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, “தேர்தல் முடிவடைந்த பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடத்துவது எப்படி சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பியது.

மேலும், தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில் இத்தகைய கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ