Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து, செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் பேசிய அவர், கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் “விசில் புரட்சி” உருவாகி வருவதாக தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
தமிழகத்தில் மட்டுமல்ல உலகளவில் கூட விஜய்யின் விசில் புரட்சி தெரிய வரும். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்க்கு தொலைநோக்கு சிந்தனை உள்ளதாகவும், தமிழகத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமை அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இந்த “விசில் புரட்சி” தெளிவாக வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள், தேர்தல் முடிவுகளை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam