Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் கவனம் ஈர்த்து வரும் விஜய் தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கைச் செய்திகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள நீதிபதி பணியிட மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொறுப்பேற்ற நீதிபதி சசிகலா திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி சுஜாதா மீண்டும் சென்னைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வழக்கை விசாரித்து வந்ததாகக் கூறப்படும் நீதிபதி சசிகலா மாற்றப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆனால், விஜய் தரப்பிலிருந்து அவரது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் திரைப்படப் பணிகள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. விவாகரத்து தொடர்பான தகவல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், நீதிபதிகள் இடமாற்றம் என்பது நீதித்துறையில் வழக்கமான நிர்வாக நடவடிக்கை என்பதால், இதனை குறிப்பிட்ட வழக்குகளுடன் தொடர்புபடுத்துவது ஆதாரமற்ற யூகங்களாகவே கருதப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam