சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) தங்கம் விலை தங்கம் விலை கடந்த 19-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 25-ந்தேதியில் இருந்து விலை சற்று உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது குறைந்துகொண்டே வருகிறது. அதன்படி நேற்று காலையில் தங்கம் வி
தங்கம்


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தங்கம் விலை தங்கம் விலை கடந்த 19-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 25-ந்தேதியில் இருந்து விலை சற்று உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது குறைந்துகொண்டே வருகிறது.

அதன்படி நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்; இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாரா வகையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்ப்னை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, வெள்ளி விலையும் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P