Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 04 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி
(56). மாட்டு வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளியான இவரது மகளான பிரித்தியை அதே
பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சதீஷ் (33) என்பவரை காதலித்து திருமணம்
செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 4 வயது மகன் மற்றும் 4 மாத பெண் குழந்தை
உள்ளது .
நித்திஷுக்கு ஏற்கனவே திருமணம் வாங்கி முதல் மனைவிக்கு இரண்டு
குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி குழந்தைகளுடன்
அதே பகுதியில் சதீஷின் தந்தை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சதீஷ் வெல்டிங் தொழிலுக்காக பெங்களூர் மற்றும் உள்ளூர் பகுதிகளில் அவ்வப்போது வேலை செய்து வந்த நிலையில் மது பழக்கத்திற்கு ஆளாகி
அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரித்தி தனது தாய் வீட்டில்
குழந்தைகளுடன் இருந்து வருவதாகவும் இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த
மூன்று மாதங்களுக்கு முன்பு பிரித்தி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி
உள்ளதாகவும் இதனை சதீஷ் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து
வந்ததாகவும் இன்று வழக்கம்போல் மது போதையில் இருந்த சதீஷ் தனது மனைவியின்
வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பிரித்தியின் தந்தை ரவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் பக்கத்து தெருவில் உள்ள
தனது வீட்டிற்கு சென்று வீட்டில் அனுமதியின்றி கள்ளத்தனமாக பதுக்கி
வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் ரவியை சுட்டுள்ளார்.
இதில் குண்டு பட்டு ரவி இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாகவும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாமனாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய திமுக கிளை செயலாளர் குமுதா வெங்கடேசனின் மகன் சதீஷை போலிசார் தீவிரமாக தேடி
வருகின்றனர்.
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று
வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் துரிதமாக செயல்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam