Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 04 ஏப்ரல் (ஹி.ச.)
5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், உசிலம்பட்டி, கமுதி, மேலநீதிநல்லூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை கொண்டு வந்தவருமான பி.கே. மூக்கையாத்தேவரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு,
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பி. கே. மூக்கையாத் தேவர் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியின் சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் இ. மகேந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J