Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடங்கினார். மூன்றாம் கட்ட பரப்புரையை நாளை புதுச்சேரியில் தொடங்குகிறார்.
நாளை, (ஏப்ரல் 06 திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புதுச்சேரியிலும், 7ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு கடலூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் திட்டக்குடி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார் கோவில், சிதரம்பம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகின்றார்.
மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
8ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு சீர்காழி பொதுக்கூட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி வேட்பாளர்களுக்கும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம் தொகுதியிலும் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகின்றார்.
மேலும் 9ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் உளுந்தூர் பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இறுதியாக முதல்வர் ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Hindusthan Samachar / vidya.b