முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் திருநாள் இன்று (ஏப்ரல் 05) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஈஸ்டர் திரு
முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் திருநாள் இன்று

(ஏப்ரல் 05) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

கருணையே வடிவான இயேசு கிறிஸ்துவின் மனிதநேயக் கருத்தியல்களை வாழ்வியல் நெறிகளாகக் கொண்டு நடக்கும் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் வன்முறைகளும், வெறுப்பும், வறுமையும், கெட்ட போர்களும் அகன்று, மனிதம் மட்டுமே எங்கும் ஆட்சி செய்யும் புத்துலகைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b