“மக்களால் ஜனநாயகம் உயிர்த்தெழும்” – அருண்ராஜ் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) உலகம் முழுவதும் ஈஸ்டர் பெருவிழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிக்க சக்திகளால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்த தினம், நம்பிக்கை மற்றும் மறுபிறப்பின் அடையாளமாக
TVK Arunraj


Ne


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

உலகம் முழுவதும் ஈஸ்டர் பெருவிழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிக்க சக்திகளால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்த தினம், நம்பிக்கை மற்றும் மறுபிறப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இனிய ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், தனது வாழ்த்து செய்தியில் அரசியல் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியதாவது,

“இயேசுபிரான் உயிர்த்தெழுந்த பின் உலகுக்கு அளித்த மூன்று முக்கியமான செய்திகளான – அஞ்சாதீர்கள், அமைதியுடன் இருங்கள், நற்செய்தியை பரப்புங்கள் – இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக உள்ளன” என்றார்.

மேலும், “தமிழ்நாட்டின் ஜனநாயகம் இன்று குடும்ப ஆதிக்கத்தின் சிலுவையில் அறையப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும் அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியால், மே 4ஆம் தேதி தமிழ்நாட்டில் ஜனநாயகம் உயிர்த்தெழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஈஸ்டர் திருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ