சகோதரத்துவம்,சமத்துவம் மலரட்டும் ஈஸ்டர் வாழ்த்து , – எடப்பாடி பழனிசாமி
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச) இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில், கர்த்தர் அருளிய சமத்துவம்,
Eps


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச)

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில், கர்த்தர் அருளிய சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் அமைதி போன்ற உயரிய விழுமியங்கள் தொடர்ந்து தழைத்திட அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் அருளால், தமிழகமும் ஒரு வளமான எதிர்காலத்திற்காக விரைவில் உயிர்த்தெழப் போகிறது.

இனிவரும் காலம் அனைவருக்கும் வசந்த காலமாக அமையட்டும்!” இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ