ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து...
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருந
விஜய்


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நல் வாழ்த்துகள்.

இத்திருநாளில் அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை வளர்ந்தோங்கி நிலைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam