மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதன் அறிவிப்பு
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையில் 28 தொகுதிகள் என்று தொகுதி பங்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பின், வேட்பாளர்கள் அறிவிப்புக்
Former MP Viswanathan Announced as Congress Candidate for Melur Constituency


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையில் 28 தொகுதிகள் என்று தொகுதி பங்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பின், வேட்பாளர்கள் அறிவிப்புக்கு கால தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் மதுரை மாவட்டத்தின் மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. நேற்று காலையே மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இதுவரை அறிவிக்காமல் இருந்த மேலூர் தொகுதிக்கான வேட்பாளராக காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பெ. விஸ்வநாதன் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி. (2009-2014) ஆவார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தேசிய செயலாளராகவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கேரளா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பார்வையாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Hindusthan Samachar / vidya.b