Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் காண்டியப்பன் (எ) சந்திரகாண்டீபன் கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் வெளிவந்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காண்டியப்பன் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும், இது தி.மு.க-வின் சதி என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அவர் தனது வேட்பாளர் நேர்காணலின் போது தமிழக காவல்நிலையங்களில் 9 வழக்குகள் இருப்பதாகவும், அந்த வழக்குகளில் கஞ்சா வழக்கு ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும் கட்சித் தலைமையிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால்,இவர் தமிழக காவல்துறையில் உள்ள வழக்கு விபரங்களை மட்டுமே சமர்பித்துள்ளார்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விபரங்களை அவர் குறிப்பிடவில்லை.
கஞ்சா வழக்கில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சாமல்கோட் காவல்நிலைய அதிகாரிகளால் காண்டியப்பன் (எ) சந்திரகாண்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விபரங்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்த தகவலை கட்சித் தலைமையிடம் தெரிவிக்காமல் அவர் மறைத்துவிட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இத்தகவல் த.வெ.க கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b