Enter your Email Address to subscribe to our newsletters

முர்ஷிதாபாத், 05 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தொடர்ந்து அவர் 4 முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார். இம்முறை இவருக்கான வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது:
இந்த முறை விவசாயிகளுக்கென தனியாக பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வாக்காளர் சிறப்புப் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளின்போது இந்த ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை முடக்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.
உங்களால் (பாஜக) ஒரு மாதத்திற்கு மட்டுமே இப்பணிகளை நிறுத்திவைக்க முடியும். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அவர்களால் என் மாநில நிர்வாகப் பணிகள் நடக்கும்.
ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் மறைமுகமாக மற்றொருவரை நீங்கள் (பாஜக) மிரட்டுகிறீர்கள். அதற்கு என் அரசு ஒருபோதும் அஞ்சாது.
எனப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனினும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தப் பணியில் இதுவரை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் 61 லட்சம் பேருக்கு திருத்தங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b