Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஈரான், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, ஈரானில் இருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து சமூக வலைத்தளங்களில் காணொளியை வெளியிட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.
மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, ஈரானில் சிக்கித் தவித்த சுமார் 345 இந்திய மீனவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் சிறப்பு பேருந்துகள் மூலம் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை வந்த மீனவர்களை பாஜகவின் மாவட்டத் தலைவர் முத்துபிரவேசம் மற்றும் பாஜகவின் அயலக அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மீனவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN