எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது - திருமாவளவன் பேட்டி
புதுச்சேரி, 05 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு காலதா
Thirumavalavan Press Meet


புதுச்சேரி, 05 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

புதுச்சேரி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு காலதாமதம் காரணமாக துவக்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவதாக கூறினோம்.

அதன்படி 4 தொகுதிகளில் எங்கள் கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தோம்.

இந்நிலையில் தற்போது தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் எங்களக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம்.

இதன்படி மற்ற 3 தொகுதிகளில் வேட்புமனுவை திரும்ப பெறமுடியவில்லை என்றாலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது என முடிவு செய்துள்ளோம்.

புதுச்சேரியில் இடசாரிகள் எங்கள் அணியில் இல்லை என்பது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால் இது எங்களது வெற்றியை பாதிக்காது.

காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடுவது என்று முடிவு செய்தேன்..

பாராளுமன்றத்தில் என்னுடைய நோக்கத்தின் படி செயல்பட முடியவில்லை..

கூட்டணி நலனை பாதிக்கும் வகையிலான திட்டமிட்ட வதந்திகள் பரப்பபட்டது.

எனவே கூட்டணி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியின் வெற்றிக்காக நான் விலகி உள்ளேன்.

திமுக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

அரசியலுக்காக பலர் வேறு விதமாக பேசுகின்றனர்..

சமூக நிதியின் அடிப்படையில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபடுகிறார்.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறோம்.

புதுச்சேரி அரசின் சின்னத்தை மாற்றுவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN