Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.
இந்தத் புனிதமான நாள் நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலைக் கொண்டாடுகிறது.
இந்நாள் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒளியைக் கொண்டுவரட்டும்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவரும் கருணையுடன் நடந்துகொள்ள ஊக்கமளிக்கவும், சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் அமையட்டும்.
என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு முக்கிய கிறிஸ்தவப் பண்டிகையான ஈஸ்டர், நாடு முழுவதும் மற்றும் உலகளவில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் வகையில், தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகளும் பிரார்த்தனை ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM