திரை நட்சத்திரமான ஜெயலலிதா முதல்வர் ஆகலாம் அதற்கு அவர் 30 வருட உழைப்பு உள்ளது. ஆனால் விஜய் முதல்வராக முடியாது - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச) 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். இதனையொட்டி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின
Mr.Piyush Goyal


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச)

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். இதனையொட்டி,

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று

நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில்,பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசுகையில்,

மயிலாப்பூர் தொகுதி செண்டிமெண்டல் உள்ள தொகுதி. மயிலாப்பூர் தொகுதி வெற்றி பெற்றவர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய கராத்தே தியாகராஜன்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வேலுவை ஒருமையில் பேசியதோடு உயிரோடு இருப்பியா இல்லை என்னவாகப் போகிறாய் தெரியவில்லை என்று கூறினார்.

அதிமுக தொண்டர்களை நம்பிதான் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக நிற்கிறது. எனக்கு இந்த கூட்டத்திற்கு முதலில் அழைப்பே வரவில்லை.

தமிழிசையை வெற்றி பெற வைப்பதற்காக வந்துள்ளேன். நானும் சீட் கேட்டேன் கிடைக்கவில்லை. எனக்கு தகுதி உள்ளது. தமிழிசை அக்கா வெற்றி பெற வைக்க வேண்டும். வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதி வேண்டும் எனக் கேட்டேன் என்றார்.

இதனை தொடர்ந்து, தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில்,

பியூஸ் கோயல் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் வெற்றிதான்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டுதான் செல்வேன் என இங்கு வந்துள்ளார்.

வேலும், மயிலும் எங்கு இருக்கும் என்றால் பழனிசாமியிடம் தான் இருக்கும்.

திருவாரூரில் தேர்தல் அறிக்கை சென்ற போது என்னை அம்மா என்று கூறினார்.

இந்த உலகம் உள்ள வரை தமிழ்நாட்டிற்கு ஒரே அக்கா தான்.

பிரதமர் மோடியை பார்த்துதான் நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பாஜகவில் இணைந்தேன்.

மக்கள் பணி செய்யவே, மக்களோடு பழகவே உங்கள் அக்காவாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல. ஆளுநர் சிம்மாசனத்தைவிட, மக்கள் மனதில் அமரும் சிம்மாசனம்தான் பெரியது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இங்கு வரவில்லை. குடும்ப உறுப்பினராகவே வந்துள்ளேன்.

தமிழ்நாட்டை கசக்கி பிழிந்து கொண்டிருக்கும் திமுகவை விரட்டுவோம். தூய்மை இந்தியா திட்டத்தால் கட்டப்பட்ட கழிவறை பூட்டிக் கிடக்கிறது. இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பிணமாக திரும்புகிறாள். போதையின் பிடியில் தமிழ்நாடு உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க திமுக அகற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் போட்டி என முதலமைச்சர் கூறுகிறார். பிரதமர் குறித்து பேச முதலமைச்சருக்கு அருகதை இல்லை. தமிழ்நாடு தலை குனிந்து உள்ளது.

மீனவர்கள் ஒருநாள் என்னை சந்தித்த போது மீன் எல்லாரும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மீனை அசைவத்தில் இருந்து சைவமாக இருந்தால் அனைவரும் சாப்பிடலாம் என்று நான் கூறினேன்

ஆளுநராக இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிடுவது எனக்காக அல்ல. நான் எல்லாவற்றையும் பெற்றுவிட்டேன். மக்களோடு மக்களாக மக்கள் பிரச்சினைகளை தீர்க்கதான். உங்களை நம்பி அசையோடு வந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோல் வைத்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் செங்கோல் வைத்து திமுகவிற்கு செறுப்படி அளிப்பார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் இந்தத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல. இது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் தேர்தல். நம்முடைய ஒட்டுமொத்த என்.டி.ஏ குடும்பமும் ஒரே குறிக்கோளுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறது. அது தமிழ்நாட்டின் நலன் மட்டுமே.

நமது முயற்சிகள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்.

தி.மு.க அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைப் பற்றி அவர்களுக்கு புரிய வையுங்கள்.

தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம்.

2021 தேர்தலுக்கு முன்பே நாம் அம்மாவை (ஜெயலலிதா) இழந்துவிட்டோம். இன்று மதுபானத் துறை மற்றும் மின்சாரத் துறையில் ஊழல் மலிந்துவிட்டது.

சாதாரண மக்கள் தங்கள் வேலைகளுக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறைகேடுகள் அனைத்தும் ஒரே குடும்பத்தின் கீழ், அதாவது ஸ்டாலின் குடும்பத்தின் கீழ்தான் நடக்கின்றன. இதற்கு அவர்களே பொறுப்பு.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் (Change Sheet) நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.இது தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம்.

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். தி.மு.க-வினர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

இந்த கடுமையான ஊழலால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இன்று அவதிப்பட்டு வருகிறார்கள்.

விஜய்நம்முடையது தான். நான் நடிகர் விஜயை சொல்லவில்லை வெற்றி விஜயத்தை கூறுகிறேன். நடிகர்களை பார்க்க கூட்டம் வரும். ஷாரூக் கான் பால்கனியில் நின்றால் கூட்டம் வரும். கமலஹாசன் அரசியலுக்கு வந்தார் 2%ஓட்டு கூட வாங்கவில்லை.

திரை நட்சத்திரமான ஜெயலலிதா முதல்வர் ஆகலாம் அதற்கு அவர் 30 வருட உழைப்பு உள்ளது. ஆனால் விஜய் முதல்வராக முடியாது. விஜய் திமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர்.

விஜய் பிரிக்கும் ஓட்டுகள் திமுக விற்கு சாதகமாக தான் போகும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ