Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்ற ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு, பஞ்சாப் சார்ந்த விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் தான் எழுப்பிய கேள்விகள் அடங்கிய காணொலியை மாநிலங்களவை எம்.பி ராகவ் சத்தா இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகவ் சத்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளியில்,
பஞ்சாப் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நான் மாநிலங்களவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறேன். இதில், நான் கானா சாகிப் வழித்தடத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதங்களைக் கோரியது, பகத் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்தது மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரச சிம்மாசனத்தைத் திரும்பப் பெறுமாறு கோரியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்காணொளியுடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
ராகவ் சத்தா நாடாளுமன்றத்தில் பஞ்சாப் பிரச்சினைகளை எழுப்பத் தவறிவிட்டார் என்று குற்றம்சாட்டி என்னை இதுபோன்ற ஒரு காணொளியை வெளியிடும் நிலையை உருவாக்கிய எனது ஆம் ஆத்மி கட்சி சகாக்களே, இதோ உங்களுக்காக ஒரு சிறிய முன்னோட்டம், படம் இன்னும் முடியவில்லை. பஞ்சாப் என்பது எனக்கு வெறும் பேச்சுப் பொருளோ அல்லது விவாதப் பொருளோ அல்ல. அதுவே எனது வீடு; அதுவே எனது கடமை; அதுவே எனது மண் அதுவே எனது ஆன்மா.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b