ராகுல்காந்தி ஒரு காலத்திலும் பிரதமர் ஆக முடியாது - குஷ்பூ
புதுச்சேரி, 05 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ரங்கசாமி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி ம
குஷ்பூ


புதுச்சேரி, 05 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

புதுச்சேரியில்

தேசிய ஜனநாயக கூட்டணி ரங்கசாமி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை

செயல்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என நம்பிக்கை

உள்ளது.

மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது.

8,9ம் வகுப்பு குழந்தைகளிடம் சாராயம், போதைப்பொருட்கள் கிடைக்கிறது.ஆனால்

புதுச்சேரியில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது.

ரெஸ்டோபார்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள்

மது அருந்திவிட்டு வகுப்பறைகளில் வந்து தகராறில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி

ரெஸ்டோபார்களுக்கும், தமிழக சாராயத்துக்கும் வித்தியாசம் உள்ளது.

மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதியை அளித்து 5 ஆண்டு திமுக ஆட்சி நடத்தியது.

டீசல் விலைக்கு மத்திய அரசு வரி சலுகை அளித்துள்ளது.

ஆனால் அதைப்பற்றி பேச

தமிழக அரசுக்கு வக்கில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குதாக பொய்யான

வாக்குறுதி அளிக்க முடியாது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது

மிகப்பெரிய நடவடிக்கை. இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டியுள்ளது.

தேவையான விஷயத்தை பாஜ காலத்தோடு செய்யும் என தெரிவித்தார்.

மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பாற்றி கொள்ள பிரதமர், ஜனாதிபதியாக

ராகுல் ஆவார் என சொல்வார். ராகுல் பிரதமராவது கனவு.

அவர்கள் கனவு காண்பதற்கு

உரிமை உண்டு. ஆனால் அவரால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது.

புதுச்சேரி மதுவை மட்டும் நம்பி இல்லை. புதுச்சேரி சுற்றுலா நகரம். இங்கு

அளவோடு மது உள்ளது. ஆனால் தமிழகத்தில் மது விற்பனையை மட்டுமே நம்பி அரசு

செயல்படுகிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 10 லட்சம் கோடி கடன் உள்ளது.

சாலை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. தமிழகத்தில் துப்புரவு பணியாளர்கள்,

ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி

வைத்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் நிச்சயம் தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.விஜய்

நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரைப்பற்றி பேச

வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரி பிரச்சாரத்தின்போது அவர்

கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

வருகையால்தான் திமுக வலுப்பெறுகிறது என்கிறார். அப்போதும் ஸ்டாலினுக்கு

பாஜகதான் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam