சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு - எடப்பாடி மீது கடும் விமர்சனம்
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச) சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான மா.சுப்பிரமணியன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி
Masu


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான மா.சுப்பிரமணியன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு தெருவாக நடந்து சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரினார்.

அவரது வருகையின்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் பகுதி செயலாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன்,

சென்னை கிண்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், எடப்பாடி கே. பழனிசாமி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

எடப்பாடி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்.

அரசியலுக்கே தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ