சேலம் மத்திய சிறையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்
சேலம், 05 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சேலம் மத்திய சிறையின் 9-வது பிளாக்கில் அடை
சிறைக்குள் செல்போன்


சேலம், 05 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சேலம் மத்திய சிறையின் 9-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சென்னை கஞ்சா வழக்கு கைதிகளான கருப்புசாமி, ஹேமநாதன் ஆகியோரின் அறையில் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, ஒரு கைதி தங்கியிருந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், சார்ஜர் சிம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சிறைகளில் செல்போன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சோழவரம், மீஞ்சூர் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்ட இருவரும் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக சென்று வந்தபோது செல்போன்சார்ஜரை கடத்தி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது சிறை விதிமுறைகளை மீறியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் சிறைக்குள் வராமல் தடுக்க பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam