வீட்டில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விபத்து - இருவர் காயம்
விருதுநகர், 05 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் வடக்கு வீதியில் உள்ள ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் ஜெயச்சந்திரன் 65, என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் வீடு இடிந்து சேதமடைந்த நி
Sivakasi Government Hospital


விருதுநகர், 05 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் வடக்கு வீதியில் உள்ள ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் ஜெயச்சந்திரன் 65, என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் வீடு இடிந்து சேதமடைந்த நிலையில் ஜெயச்சந்திரன் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது தாய் பவுன்தாய் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள நிலையில் அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN