மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபூர், 05 ஏப்ரல் (ஹி.ச.) மணிப்பூர் மாநிலத்தின் காஞ்சிபூர் பகுதியில் உள்ள டி.எம் பல்கலைக்கழக வளாகத்தின் ஆசிரியர்கள் குடியிருப்பின் நுழைவாயிலில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Students stage protest


காஞ்சிபூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)

மணிப்பூர் மாநிலத்தின் காஞ்சிபூர் பகுதியில் உள்ள டி.எம் பல்கலைக்கழக வளாகத்தின் ஆசிரியர்கள் குடியிருப்பின் நுழைவாயிலில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் குடியிருப்பில் 5 ஆசிரியர்கள் வசிப்பதாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து, மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களுக்கு கல்வி சுதந்திரம் கொடுங்கள், சட்டத்தை நிலைநாட்டுங்கள், இந்த குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம் என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் குகி-மைதேயி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 260 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கோர் இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b