தற்கொலைக்கு தூண்டியதாக வாழ்க்கை துணையை குற்றம்சாட்ட முடியாது - மும்பை ஐகோர்ட்
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட திருமணத் தகராறு காரணமாக மட்டுமே, ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், கணவன் தற்கொலை செய
மும்பை உயர் நீதிமன்றம்


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட திருமணத் தகராறு காரணமாக மட்டுமே, ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், கணவன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, அவரது மனைவிக்கு எதிராக “தற்கொலைக்கு தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டில் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை குடும்ப வாழ்க்கையில் சாதாரணமானவை எனக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான தகராறுகள் இருந்ததாலேயே ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக கூற முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், தற்கொலைக்கு தூண்டுதல் குற்றம் நிரூபிக்க, குற்றம் சாட்டப்பட்டவர் நேரடியாக தூண்டியிருக்க வேண்டும் அல்லது தெளிவான நோக்கத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.

இந்த வழக்கில், தற்கொலை குறிப்பில் மனைவியை குற்றம் சாட்டும் வகையில் எந்த குறிப்பும் இல்லை என்றும், இருவருக்கும் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam