துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமிதான் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
விருதுநகர், 05 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், விருதுநகரில் இன்று (ஏ
துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமிதான் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்


விருதுநகர், 05 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், விருதுநகரில் இன்று (ஏப்ரல் 5) nநடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார்.

தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் நடித்த மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். விஜயகாந்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு அந்த திரைப்படத்தில் நடித்தேன். இன்று விஜயகாந்த் மகனுக்கு ஓட்டு கேட்டு இன்று பிரச்சாரம் செய்கிறேன்.

ஆற அமர கொஞ்சம் சிந்திச்சி பாரு' என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தேன்.

திராவிட மாடல் ஆட்சியில் விருதுநகருக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றம். திருச்சுழி மக்களின் நீண்டக்கால கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகருக்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டால் ஒரு நாள் போதாது.

அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் புதிய மருத்துவமனைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை பகுதியில் பூங்கா, சாஸ்தா கோயில் அருவி பகுதியில் மேம்பாட்டு பணிகள். விருதுநகர் மாவட்டத்தில் 40,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அவதூறுகளையும் தரம் தாழ்ந்த பேச்சுகளையும் தொடர்ந்து பரப்புரை செய்கிறார் பழனிசாமி. சாதனைகளை எதுவும் சொல்லமுடியுமால் அவதூறுகளை கொண்டு பரப்புரை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ள பொய்களை புத்தகமாகவே போடலாம்.

5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞரை பற்றி பச்சை பொய்யை பேசி வருகிறார் எடப்பாடி. ஒரு பொய்யில் இருந்து தப்பிக்க பல பொய்களை கூறி வருகிறார் பழனிசாமி. சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததால் வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்து வருகிறார் பழனிசாமி.

காமராஜருக்கு சொந்த மகன் போன்று இறுதிச் சடங்கு செய்தார் கலைஞர். காமராஜர் உடலை வாங்கி பீரங்கி வண்டியில் வைத்தவர் கலைஞர். தகன மேடைக்கு அருகே இந்திரா காந்தியோடு கலைஞரும் இருந்தார். பழனிசாமி சொன்ன பொய் உண்மையாக இருந்திருந்தால் அந்த காலத்திலேயே போராட்டம் நடந்திருக்கும் அல்லவா. பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால் அந்த காலத்திலேயே ஊடகங்களில் வந்திருக்கும் அல்லவா?.

முந்தாநாள் அடித்த காற்றில் முதலமைச்சராகி மக்களால் தூக்கி அடிக்கப்பட்ட பழனிசாமிக்கு இது தெரியாது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜானகி ராமச்சந்திரன் புகைப்படத்தை தலைமைச் செயலகத்தில் வைக்கச் சொன்னார். அரசு ஊழியர்களை ஏமாற்றி இருந்தால் சங்கத்தினர் என்னை சந்தித்து இனிப்பு ஊட்டியிருப்பார்களா?

லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தயுள்ளோம். அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி, அவர்கள் வாங்கும் ஊதியத்தை இழிவுபடுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அரசு ஊழியர்களின் ஓட்டு எடப்பாடிக்கு கிடைக்காது. அரசு ஊழியர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. சசிகலா, தினகரனுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி.

சட்டப்பேரவையில் தன்னைக் காப்பாற்றிய சபாநாயகர் தனபாலுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன், சசிகலா, தனபால் உள்ளிட்டோருக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதா எதிர்த்த பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். தன்னையே நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் பழனிசாமி.

செங்கோட்டையன், சசிகலா, தனபால் உள்ளிட்டோருக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. விசுவாசத்துக்கு கட்டப்பா என்றால் துரோகத்துக்கு பழனிசாமி. 2024 நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியை மக்கள் திமுகவுக்கு கொடுத்தார்கள். ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த பழனிசாமி, 11வது தோல்வியை சந்திப்பார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஃபியூஸ்போன சாமியாகிவிட்டார்.

தேர்தல் அறிக்கை என்னும் சூப்பர் ஸ்டாரை களத்தில் இறக்கி பரப்புரை செய்து வருகிறேன். இந்தியாவிற்கே மாடலாய் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளது. தினமும் ஒரு மணிநேரம் மகளிருக்கு ஓய்வை வழங்கியுள்ளது கலைஞர் உரிமைத் தொகை.

இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன் என்பது அல்டிமேட் திட்டம். ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். விருதுநகரில் பசுமை பட்டாசு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். அடுத்த 5 வருடங்களில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். அனைத்து தரப்பு அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.

பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி ஏற்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் பெண்கள் பணிக்கு செல்லும் வகையில் 1000 குழந்தைகள் காப்பகம் உருவாக உள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் ஆட்டோ வாங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படும். ஆறிலிருந்து அறுபது வரை, பெண்கள் முதல் முதியவர்கள் வரை என எல்லோருக்கும் திமுக தேர்தல் அறிக்கை பிடிக்கும். வாக்குறுதியை யார் வேண்டுமானால் கொடுக்கலாம், ஆனால் திமுக கொடுக்கின்ற வாக்குறுதிகளைதான் மக்கள் நம்புவார்கள்.

என்.டி.ஏ.வை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு எதிராக வேலைகளை பார்த்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் சொந்தம் கொண்டாடும். காலம் தோறும் தமிழ், தமிழர்கள், தமிழ்ப் பண்பாட்டு மீது பாஜகவுக்கு வெறுப்புதான். பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதுதான். என்.டி.ஏ ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. காமராஜரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தார்கள். எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையில் திராவிட மாடல் 2.0வில் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b